அவுஸ்திரேலியாவில் பலத்த புயலால் வீடுகளுக்கு சேதம்

மேற்கு அவுஸ்திரேலியாவை தாக்கிய செரோஜா எனும் சக்தி வாய்ந்த புயலால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.

செரோஜா புயல் கரையைக் கடந்த போது, கல்பாரி, ஜெரால்டன் உள்ளிட்ட கடற்கரையோர ஊர்களில் மணிக்கு 170 கிலோ மீற்றர் வேகத்தில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

கனமழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் பாதித்த பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு, மீட்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மேற்கு அவுஸ்திரேலியாவில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

தென் கிழக்கு மாநிலங்களின் பல நகரங்களும் தொடர்ந்து சிவப்பு எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடத்தில் இருப்பதற்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த புயலால் ஏற்பட்டிருக்கும் சேதங்கள் பற்றி முழுமையான விபரங்களை பெறுவதற்கு காலம் எடுத்துக்கொள்ளும் என்று அவசர சேவை நிறுவனங்கள் நேற்றுக் காலை தெரிவித்தன.

கடந்த மாதம் ஆறுகள் மற்றும் அணைகள் நிரம்பி கடந்த தசாப்தங்களில் இல்லாத மோசமான வெள்ள நிலையால் கிழக்கு அவுஸ்திரேலியாவில் சுமார் 18,000 மக்கள் இடம்பெயர்ந்தனர்.

 

Tue, 04/13/2021 - 11:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை