பாம் எண்ணெய்க்கு தடை விதிப்பு; சிற்றுண்டி உற்பத்தியாளர் பெரும் அசௌகரியத்தில்!

அரசாங்கம் பாம் எண்ணெய்க்கு விதித்த தடை காரணமாக சிற்றுண்டி உற்பத்தியாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை சிற்றுண்டி உற்பத்தியாளர் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எம்.டி சூரிய குமார தெரிவித்துள்ளார். 

பாம் எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் இதுவரையில் வழங்கப்படவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தங்களது உற்பத்திகளுக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் அதனை பூர்த்தி செய்வதற்கு சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு முடியாமல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Wed, 04/21/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை