இந்தோனேசிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

ஜாவா கடலில் கடந்த ஜனவரி மாதம் விழுந்து நொறுங்கிய ஸ்ரீவிஜயா விமானத்தின் விமானி அறையில் இருந்த குரல் பதிவுப் பெட்டியை மீட்டுள்ளதாக இந்தோனேசியப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த 62 பேரும் உயிரிழந்தனர்.

1 மீற்றர் ஆழமான சேற்றுப் பகுதியில் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதில் உள்ள பதிவை மீட்டெடுக்க ஒரு வாரம் செல்லும் என்றும் அதிகாரிகள் ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்தனர்.

இந்த விபத்துக்கான முக்கிய காரணத்தை இந்த கறுப்புப் பெட்டி மூலம் பெற முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட எஸ்.ஜே182 என்ற இந்த விமானம் சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.

விமானத்தின் எஞ்சினில் ஏற்பட்ட பிரச்சினையால் அது கடலில் செங்குத்தாக விழுந்ததாக ஆரம்ப அறிக்கையில் கூறப்பட்டது.

Thu, 04/01/2021 - 11:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை