நாட்டில் ஒட்சிசனுக்கு எவ்வித தட்டுப்பாடும் கிடையாது

உற்பத்தி கொள்​ளளவை அதிகரிக்கவும் திட்டம்

நாட்டில் எந்தவித ஒட்சிசன் தட்டுப்பாடும் கிடையாதென்றும் போதியளவு ஒட்சிசன் கையிருப்பில் உள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கவனத்திற்கொண்டு ஒட்சிசனின் கொள்ளளவை மேலும் அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு கிழக்கு வைத்தியசாலை மற்றும் களுபோவில போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் ஒட்சிசன் தட்டுப்பாடு நிலவுவதாக சில சமூக வலைத்தளங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன. அது உண்மைக்கு புறம்பான தகவலாகும்.மேற்படி ஆஸ்பத்திரிகளில் எந்தவித ஒட்சிசன் தட்டுப்பாடும் கிடையாது என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.

சுகாதார அமைச்சானது தற்போது கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை மத்திய நிலையங்கள் மற்றும் போதனா வைத்தியசாலைகளுக்கும் பெருமளவிலான ஒட்சிசன் சிலிண்டர்களை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில் தற்போது மெடிக்கல் ஒட்சிசன் பெற்றுக்கொடுக்கும் தொழிற்சாலைகளிலிருந்து எத்தகைய குறைபாடுமின்றி ஒட்சிசன் கிடைக்கின்றன.

அதே வேளை, ஒட்சிசனின் அளவை மேலும் அதிகரிப்பதற்கும் அந்த தொழிற்சாலைகள் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 04/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை