ஆரோக்கிய வாழ்வு, மகிழ்ச்சியான சூழல் மலரட்டும்

ஆரோக்கிய வாழ்வு, மகிழ்ச்சியான சூழல் மலரட்டும்-PSM Charles-Northern Provincial Governor New Year Greeting

- வட மாகாண ஆளுநரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

தமிழ் சிங்கள புத்தாண்டு, நாட்டின் அனைத்து மக்களுக்கும் வளமான சுபிட்சத்தையும், ஆரோக்கியமான வாழ்வினையும், மகிழ்ச்சியான சூழலையும் ஏற்படுத்த வேண்டும் என்று வாழ்த்துவதோடு அனைவரதும் புத்தாண்டுப் பிரார்த்தனைகளில் தானும் இணைந்து கொள்வதாக, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

வட மாகாண ஆளுநர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இப் புத்தாண்டினை ஒன்றுபட்டு கொண்டாடும் இலங்கை மக்கள் அனைவரும் கோவிட்-19 மட்டுமின்றி அனைத்துவித அசௌகரியங்களையும், அநீதிகளையும் களைவதற்கு ஒன்றுபட்டு நின்று, இலங்கை தீவினை ஒரு சிறந்த நாடாக மாற்றும் திடசங்கற்பத்தினை இந்த பெருநாளில் மேற்கொள்வோம் என்று வேண்டி, எனது இனிய வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரிவித்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

Wed, 04/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை