ஈஸ்டர் தாக்குதலை தடுக்க வாய்ப்பு இருந்தும் அதிகாரிகள் கவனயீனம்

பரிந்துரை வழங்க அமைத்த ஆணைக்குழு குற்றச்சாட்டு - அமைச்சர் சமல்

ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்க வாய்ப்புகள் பல இருந்த போதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முறையில் செயற்பட்டிருந்தால் தாக்குதலை தடுத்திருக்கலாம் என சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாவனெல்லயில் புத்தர் சிலை உடைப்புடன் தொடர்புடைய பலர் ஈஸ்டர் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்த நேரத்தில் அவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் குற்றவாளிகளை அடையாளம் காணவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நாட்டில் நிகழாமல் பார்த்துக் கொள்ளவும் தாம் உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது குறித்த பரிந்துரைகள் சட்டமா அதிபரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஆராய்ந்த பின்னர் சந்தேக நபர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவர்களின் கடமை என்றும் சமல் ராஜபக்ஷ் கூறினார்.

இதேவேளை ஈஸ்டர் தாக்குதலுக்கு உதவிய 32 சந்தேக நபர்கள் இந்த அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

Wed, 04/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை