Header Ads

இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு ஆட்சேர்ப்புக்கான எழுத்துமூல பரீட்சை

- மே. 08இல் 06 பரீட்சை நிலையங்கள் தெரிவு

இலங்கை பொலிஸ் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பயிலுனர் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஆட்சேர்ப்புக்கான நேர்முகப் பரீட்சையில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான எழுத்து மூலப் பரீட்சைகள் எதிர்வரும் மே மாதம் 08ஆம் திகதி நடத்தப்படவுள்ளன. இப் பரீட்சை 06பரீட்சை மத்திய நிலையங்களில் காலை 08.30தொடக்கம் 10.30வரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. 

பரீட்சை மத்திய நிலையங்களாக கொழும்பு 12ஹமீட் அல் ஹுசேனி மகா வித்தியாலயம்,  கொட்டாஞ்சேனை விவேகானந்தா மகா வித்தியாலயம், கண்டி வித்தியார்த்த வித்தியாலயம்,  அனுராதபுரம் நிவத்தக தேசிய வித்தியாலயம்,  காலி புனித அலோசியஸ் மஹா வித்தியாலயம்,  அம்பாறை  டீ.எஸ் சேனாநாயக்க மஹா வித்தியாலயம்   என்பன தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

இப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் தற்போது விண்ணப்பதாரிகளுக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் அனுமதி அட்டை பரீட்சை தினத்திற்கு முன்பு கிடைக்காவிடின் பரீட்சைக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் 011-5811921 அல்லது 011-5811925 தொலைபேசி இலக்கங்களுக்கு அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

Fri, 04/30/2021 - 09:24


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.