தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோருக்கான தண்டனை

ரூ.10,000 அபராதத்துடன் 06 மாத சிறை

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் அவர்கள் குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் 10,000 ரூபா தண்டப்பணம் மற்றும் 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களுள் அதிகமானோர் மொனராகலை, திருகோணமலை மற்றும் களுத்துறை மாவட்டங்களை சேர்ந்தவர்களென தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 3,900 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Thu, 04/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை