இந்தியாவில் பரவும் கொரோனா இலங்கையில் பரவல் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை

- முதற்கட்ட ஆய்வில் தகவலென்கிறார் Dr.சந்திம ஜீவந்தர

இந்தியாவில் பரவும் கொரோனா தொற்றின் மாறுபாடு இலங்கையில் பரவுகிறது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவுமில்லையென முதற்கட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.  

நாட்டில் பரவும் வைரஸின் மாற்றம் தொடர்பில் முழுமையான விபரம் அடுத்த வாரம் வெளியாகுமெனன ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலையின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் ஆய்வுகூட தலைவரான டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.  

இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. இருப்பினும், இதுபோன்ற சாத்தியத்தை குறைக்க சுகாதார அதிகாரிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.    நாட்டில் பரவி வரும் வைரஸ் ஒரு பிறழ்வுக்கு உட்பட்டது மற்றும் ஒரு புதிய மாறுபாடாக கூட இருக்கலாமென முதற்கட்ட ஆய்வுகள் காட்டுவதாகவும் டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.  

குறிப்பாக பண்டிகைக் காலத்திற்குப் பின்னர் கொழும்பு, குருநாகல் மற்றும் கண்டியிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் இந்த பிறழ்வை அவதானித்ததாகவும் அவர் குறிப்பிட்டர்.   

தற்போது இலங்கையில் பரவி வரும் வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும், அதிகளவில் பரவக்கூடுமென்பதனால் மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் பின்பற்றினால் வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க முடியுமென்றும் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.  

Wed, 04/28/2021 - 11:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை