வேகமாக பரவும் கொரோனா; ஜம் இய்யத்துல் உலமா விசேட வேண்டுகோள்

நாட்டில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது விடயமாக சுகாதார அமைச்சு வழங்கும் வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்றி, இந்த நோயிலிருந்து தத்தமது குடும்பங்களையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகலரையும் கேட்டுக் கொள்வதாக அறிவித்துள்ளது.

அதன் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முஸ்லிம்கள் ரமழான் காலத்திலும் ஏனைய காலங்களிலும் சுகாதார துறையினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் முழுமையாக பின்பற்றி நடத்தல் வேண்டும். குறிப்பாக முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ளுதல், 01 மீட்டர் இடைவெளியை பேணுதல், சன நெரிசலான இடங்களைத் தவிர்த்தல் போன்ற விடயங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதன் அவசியத்தை உலமாக்கள் பொது மக்களுக்கு தொடர்ந்தும் அறிவுறுத்தி, தங்களது மார்க்க சொற்பொழிவுகளில் இதனை ஞாபகமூட்ட வேண்டும்.

கூட்டாக அமல்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களிலும் ஏனைய நேரங்களிலும் மஸ்ஜித்களும் மேற்படி விடயத்தில் சுகாதார அதிகாரிகள் மற்றும் வக்ப் சபையினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை முழுமையாகப் பின்பற்றி நடத்தல் வேண்டும்.

Sat, 04/24/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை