இந்தியா நிலை தொடர்பில் உலக சுகாதார அமைப்பு கவலை

இந்தியாவில் வைரஸ் பரவல் அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு மிகுந்த கவலை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நிலைமையை வார்த்தைகளால் விபரிக்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பு தலைவர் டொக்டர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் கூறினார்.

இந்தியாவுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் நிறுவனம் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். ஆயிரக்கணக்கான ஒட்சிசன் செறிவூட்டிகள், முன்னரே தயாரிக்கப்பட்ட ஆய்வகப் பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாகவும் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் கூறியுள்ளார்.

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த திங்களன்று மட்டும் 2,800க்கும் அதிகமானோர் நோய்த் தொற்றால் உயிரிழந்தனர். தொடர்ந்து 5ஆவது நாளாக திங்களன்று அங்கு 300,000க்கும் அதிகமானோருக்குக் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்தியாவில் நோய்த்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 17 மில்லியனைக் கடந்துள்ளது.

Wed, 04/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை