சன நடமாட்டமுள்ள பகுதிகளில் சிவில் உடையில் பொலிஸார்

பண்டிகைக்காலத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சனநடமாற்றம் அதிகமாக உள்ளப்பகுதிகளில் சிவில் உடை அணிந்த பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார். 

புத்தாண்டு காலப்பகுதியில் பொலிஸார் மேற்கொள்ளும் சுற்றிவளைப்புகளில் கொவிட்19தொற்றை கட்டுப்படுத்தும் சுகாதார வழிகாட்டல்களை மீறும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படும். 

வர்த்தக நிறுவனங்களை நடத்திச் செல்லும் நபர்கள் மற்றும் நுகர்வோர் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுகின்றனரா என்பதை சிவில் உடையில் நேற்று முதல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸார் கண்காணிப்பதுடன், வழிகாட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளும் எடுப்படும். 

அதேபோன்று பஸ்களில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனரா என்பது குறித்தும் அவதானம் செலுத்த விசேட பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புத்தாண்டு காலப்பகுதியில் இலங்கையில் அதிகமான விபத்துகள் ஏற்படுவதால் அவற்றை தடுப்பதற்காக 24 மணித்தியாலமும் விசேட நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

 

 

Mon, 04/12/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை