பொதுபிட்டிய அரச வைத்தியசாலையில் ஊழியர் தட்டுப்பாடு

பொதுபிட்டிய அரச வைத்தியசாலையில் ஊழியர் தட்டுப்பாடு-Pothupitiya Hospital Human Resource Anomalies

கலவான பொதுபிட்டிய அரச வைத்தியசாலையில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வைத்தியசாலையை கொண்டு நடத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக நிர்வாகம் தெரிவிக்கின்றது. அதுமட்டுமின்றி வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்துவருகின்றனர்.

எனவே இப்பிரச்சினைக்கு துரிதமாக தீர்வினை பெற்றுத்தருமாறு வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

1962 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்வைத்தியசாலை அடிப்படை வசதிகள் இன்மை, ஆளணி பற்றாக்குறை போன்றவற்றுக்கு மத்தியிலேயே இயங்கிவருவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர் வைத்தியசாலைக்கு 13 சிற்றூழியர்கள் தேவைப்பட்டுள்ள போதிலும் தற்போது 7 பேர் மட்டும் கடமையில் உள்ளனர்.

மேலும் வைத்தியசாலையில் பல் வைத்தியர் ஒருவர் பணியாற்றி கொண்டிருக்கின்ற போதிலும் போதுமான சிற்றூழியர்கள் இன்மையினால் பொதுமக்களுக்கு முறையான சேவையை வழங்க முடியாதுள்ளது.

பொறுப்பு வாய்ந்தவர்கள் வைத்திசாலை தேவைகள் தொடர்பில் அக்கறை செலுத்தி முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டுமெனவும் வைத்தியசாலை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

Fri, 04/16/2021 - 15:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை