நாசா ஹெலி செவ்வாயில் பறப்பதற்கு ஏற்பாடு தயார்

செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்ட நாசானில் இன்ஜினியுட்டி ஹெலிகொப்டர் இன்று திங்கட்கிழமைக்குள் அந்த கிரகத்தில் பறக்கவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹெலியை பறக்கவிடும் திட்டம் இயந்திரக் கோளாறுகள் பற்றிய அச்சம் காரணமாக ஒரு வாரத்திற்கு மேல் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஹெலி பறக்கவிடப்படுவது வேற்று கிரகம் ஒன்றில் பறக்கவிடப்படும் முதல் விமானமாக பதிவாகவுள்ளது. அத்துடன் இந்த முயற்சி மூலம் செவ்வாயின் மேற்பரப்பு பற்றி புதிய தகவல்களை சேகரிக்கவும் நாசா எதிர்பார்த்துள்ளது.

“நாசா தனது இன்ஜினியுட்டி செவ்வாய் ஹெலிகொப்டரை ஏப்ரல் 19, திங்கட்கிழமைக்கு முன்னராக பறக்கவிட திட்டமிட்டுள்ளது” என்று அந்த விண்வெளி ஆய்வு மையம் கடந்த சனிக்கிழமை அறிவித்தது. இந்த தானியக்க பறத்தல் நிகழ்ந்து சில மணி நேரத்திற்கு பின்னரே அது பற்றிய தரவுகள் பூமிக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பூமியின் வளிமண்டல அழுத்தத்தில் ஒரு வீதத்திற்கு குறைவாக, செவ்வாயில் காற்று மிக மெல்லிதாக இருக்கும் நிலையில் அங்கு பறத்தல் என்பது சவாலானது என்று நாசா தெரிவித்தது.

Mon, 04/19/2021 - 12:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை