யுரேனியத்தை மேலும் செறிவூட்டுகிறது ஈரான்

ஈரானிய அணு உலை ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக ஈரான் 60 வீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்யப்போவதாக அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதம் தயாரிக்க யுரேனியத்தை 90 வீதம் செறிவூட்ட வேண்டிய நிலையில் இது அந்த முயற்சியை நெருங்குவதாக உள்ளது.

நன்டான்ஸ் அணு உலையின் மின் கட்டமைப்பின் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் யூரேனிய மையநீக்கிகளுக்கு சேதம் ஏற்பட்டது.

Fri, 04/16/2021 - 15:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை