ச.தொ.ச. வாகனங்களில் குண்டுகள் கடத்தலா?

- களங்கத்தை துடைக்க வேண்டும்

ச.தொ.ச நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனங்களில் குண்டுகள் கடத்தப்பட்டதாக ஆளும் தரப்பு அமைச்சர் ஒருவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொண்டு ச.தொ.ச நிறுவனத்தின் மீதான களங்கத்தை துடைக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த விசேட கூற்றைத் தொடர்ந்தே ரிஷாட் பதியுதீன் அவரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

அமைச்சர் பந்துல குணவர்தன, சதொசவின் நற்பெயரை பாதுகாக்க வேண்டுமென கூறியுள்ளார். அதனை வரவேற்கிறோம். கொவிட்19 தொற்று தொடங்கியது முதல் மக்களுக்கு பாரிய சேவை செய்துவரும் நிறுவனமாக சதொச உள்ளதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், சதொச நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆளும் தரப்பு அமைச்சர் ஒருவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு ஒன்றுள்ளது.

அது தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொண்டு உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். சஹ்ரானின் குண்டுகள் சதொச வாகனங்களின் ஊடாகதான் கொண்டுசெல்லப்பட்டதாக ஆளும் தரப்பு அமைச்சர் ஊடகங்களில் பாரிய பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார். சஹ்ரான், சதொச வாகனங்களின் ஊடாகத்தான் குண்டுகளை கடத்தினாரா என்பதை இந்த அதியுயர் சபைக்கு வர்த்தக அமைச்சர் என்ற ரீதியில் நீங்கள் வெளிப்படுத்த வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, இந்தவிடயம் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 04/10/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை