அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஒரு தொழிற்துறை வட்டாரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, ஐவர் காயமுற்றனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் காயமுற்றவர்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நடவடிக்கைகளை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின் இந்த சம்பவம் நடந்துள்ளது.

துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் ஒரு தொற்றுநோய் போன்றது என்றும், சர்வதேச சங்கடம் என்றும் பைடன் விபரித்துள்ளார்.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளன. கடந்த வியாழக்கிழமை தெற்குக் கரோலினாவில் முன்னணி மருத்துவர் ஒருவர், அவரது மனைவி மற்றும் அவர்களின் இரு பேரப்பிள்ளைகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிதாரி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது உடல் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த மாதத்தில் கொலொராடோவில் உள்ள வணிக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டதோடு மார்ச் 17 ஆம் திகதி ஜோர்ஜியாவில் மூன்று மசாஜ் நிலையங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டுப் பேர் பலியாகினர்.

Sat, 04/10/2021 - 11:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை