உயர் நீதிமன்றில் சமர்ப்பித்த மனுக்கள் சபாநாயகரிடம்

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கான சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 17 மனுக்களின் பிரதிகள் தனக்கு கிடைத்திருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் அறிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியதையடுத்து இடம்பெற்ற சபாநாயகரின் அறிவிப்பின்போதே சபாநாயகர் இதனை அறிவித்தார்.

அரசமைப்பின் 121(1) உறுப்புறுமையின்படி இலங்கைக் காணி அபிவிருத்தி ஆணைக்குழு தொடர்பிலும் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் பிரதிகள் தனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் இதன்போது சபைக்கு அறிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 04/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை