சிறையில் உள்ள காணாமலாக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்போரே தேவை

- மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல்

நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கின்றவர்கள்தான் எமக்கு தேவையென மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். 

மன்னார் நகர மண்டபத்தில் துணிச்சலுள்ள பெண்மணிக்கான சர்வதேச விருதினைப் பெற்ற சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜாவை வரவேற்கும் நிகழ்வு  சனிக்கிழமை (17)  நடைபெற்றது. 

இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மேலும் கூறியுள்ளதாவது, “ எமது சமூகத்திலுள்ள பெரும்பாலானோர் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருகின்றனர். 

சிறை தண்டனை அனுபவிப்போர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழ்கின்றவர்களையே அதிகளவு சமூகத்தில் காண்கின்றோம்.   ஆகவே மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து அவர்களுக்காக குரல் கொடுக்கின்றவர்களே தற்போது எமக்கு தேவைப்படுகின்றனர்.   இதேவேளை சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜா, தனது இளம் வயதில் மக்களுக்காக குரல் கொடுத்தமையினால்தான், துணிச்சலுள்ள பெண்மணிக்கான சர்வதேச விருதினைப் பெற்றுள்ளார்.   அவர் மக்களுக்காக குரல் கொடுத்து மக்களின் உரிமைகளை பெற்றுத்தர தயாராக இருக்கின்றமையை எண்ணி இறைவனுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Mon, 04/19/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை