ஹொங்கொங்கில் இனியும் நியாயமான தேர்தல் இல்லை

ஹொங்கொங்கில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்திருப்பது ஜனநாயகத்தை மறுப்பதாகவும் மக்களை அவமானப்படுத்துவதாகவும் உள்ளது என்று அந்த நகர செயற்பாட்டாளர் நாதன் லோ சாடியுள்ளார்.

'ஹொங்கொங்கில் இனியும் சுதந்திரமான நியாயமான தேர்தல் இருக்காது. அரசியல் கொள்கை மூலம் வேட்பாளர்கள் குறைக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான ஆசனங்கள் சீன கம்யூனிய கட்சி மற்றும் கூட்டணி ஆதரவாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் மறுக்கப்பட்டிருப்பது மற்றும் மக்கள் அவமானப்படுத்தப்படுவது சீனா கம்பூனிஸ கட்சி எவ்வாறு நாகரிகத்தையும் சுதந்திரத்தையும் அழிக்கிறது என்பதை காட்டுகிறது' என்று ட்விட்டரில் லோ தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங் தேர்தல் முறையில் சர்ச்சைக்குரிய மாற்றங்களை கொண்டுவர சீனா ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் சட்ட மன்றத்தில் மக்களால் தேர்வு செய்யப்படுபவர் எண்ணிக்கை பாதியில் இருந்து ஐந்தில் ஒன்றாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் சீனா ஹொங்கொங் மீதான பிடியை மேலும் இறுக்கியுள்ளது.

Sat, 04/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை