சகல பாடசாலைகளும் தொடர்ந்தும் இயங்கும்

கல்வியமைச்சு அறிவிப்பு

சகல பாடசாலைகளும் தற்போது இயங்கும் முறையில் சுகாதார வழிகாட்டியினை பின்பற்றி தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகளின் அதிபர்கள் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஊடாக அந்தந்த பாடசாலைகளின் செயற்பாடுகள் முன்னெடுத்து செல்லப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அடுத்த மாதம் 31ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் அரசாங்கத்தினால் கடந்த 23ஆம் திகதி சுகாதார வழிகாட்டியொன்று வெளியிடப்பட்டது.

இதற்கமைய, பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளில் 50 சதவீத மாணவர்களை கொண்டு கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதேநேரம், பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் என்பன மூடப்படுவதுடன், மேலதிக வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 04/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை