சட்டம் ஒழுங்கு செயற்பாடுகளில் அரசாங்கம் தலையீடு செய்யாது

சட்டம் ஒழுங்கு செயற்பாடுகளில் அரசாங்கம் தலையீடு செய்யாது. ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாகவே சில அமைப்புகளை தடைசெய்ய நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் என்ற வகையில் நாம் இவற்றில் தலையீடு செய்யவில்லையென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் 11 முஸ்லிம் அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. அவற்றின் சொத்துக்களை முடக்குவது பற்றியும் தெரிவிக்கப்படுகிறது.பொதுபலசேனா தொடர்பில் அரசாங்கம் ஏதாவது முடிவு எடுத்துள்ளதா? என்று ஊடகவியலாளர் ஒருவர் வினவினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர்,

அரசாங்கம் இவற்றைச் செய்வதாக தவறான கருத்து தெரிவிக்கப்படுகிறது. ஆணைக்குழு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அதிலுள்ள விடயங்கள் பற்றிஅரசாங்கம் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும். இதற்கிடையில் சட்டம் ஒழுங்கு அமைச்சினால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் சுயாதீனமான செயற்பாடுகளில் நாம் தலையீடு செய்யமாட்டோம். சட்டவரையறைகளுக்கு உட்பட்டதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். சட்டம் ஒழுங்கு செயற்பாடுகளில் அரசாங்கம் தலையீடு செய்யாது.

அலரிமாளிகையில் இருந்து முடிவுகளை எடுக்கமாட்டோம். சட்ட மாஅதிபர் திணைக்களத்தை அழைத்து யாருக்கு எதிராக வழக்கு தொடர்வது என்று அறிவிக்கமாட்டோம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

Wed, 04/21/2021 - 06:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை