தம்புத்தேகம பொருளாதார நிலையத்துக்கு அதிகளவு மரக்கறி, பழவகைகள் வருகை

- தம்புள்ளை மூடப்பட்டதால் வியாபாரிகள் படையெடுப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இரண்டு வாரங்களுக்கு தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டதால், தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு கூடுதலான மரக் கறிகளும், பழ வகைகளும்  வந்து சேர்வதாக தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சுனில் செனவிரத்ன தெரிவித்தார். நாட்டின் பல பிரதேங்களிலிருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் எனப் பெரும்பாலானோர் தம்புத்தேகமவுக்கு வருகை தருவதால், மத்திய நிலையத்திலிருந்து நகர் வரைக்கும் நீண்ட தூரம் வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன.இதனால், பாரிய வாகன போக்குவரத்து நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன.தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறி மற்றும் பழவகைகள் என நாளாந்தம்

5 இலட்சம் கிலோ கிடைக்கின்றன.இந்நிலையில் தற்போது தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டதால்,சுமார் 12முதல் 13இலட்சம் கிலோ வரையான மரக்ககறிகள் கிடைத்து வருவதாகவும் சுனில் செனவிரத்ன தெரிவித்தார்.கூடுதலாக மலையக மரக்கறி வகைகள் கிடைப்பதாகவும் சகல வகையிலுமான பொருட்களையும் விலைக்கு பெற்றுக்கொள்வதற்கு மத்திய நிலையம் தயாராகவிருப்பதாகவும் தெரிவித்த அவர், மரக்கறி மற்றும் பழவகைகளின் விலையில் சில வேளை வீழ்ச்சி ஏற்படக் கூடுமெனவும் தெரிவித்தார்.

தேவைப்படுமாயின் நள்ளிரவு வரைக்கும் தம்புத்தேகம பொருளாதார நிலையத்தை திறந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்)

Fri, 04/30/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை