ஹப்புத்தளை இலங்கை வங்கி ஊழியர்களுக்கு கொரோனா

- இரு வாரங்களுக்கு பூட்டு

ஹப்புத்தளை - இலங்கை வங்கிக்கிளை அலுவலகம், தொடர்ந்துவரும் இருவாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் சுப்ரமணியம் சுதர்ஷன் தெரிவித்தார். 

வங்கிக்கிளையின் முகாமையாளர், காசாளர், உதவியாளர் ஆகிய மூன்று பேருக்கு கொவிட் 19தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக ககாகொல்லை கொவிட் 19சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.  

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மேற்படி வங்கிக்கிளையில் கடமையாற்றும் ஒன்பது பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அப்பரிசோதனை அறிக்கை நேற்று வெளியான போது, குறிப்பிட்ட மூவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.   இதனையடுத்து, வங்கிக்கிளையில் கடமையாற்றுபவர்களின் குடும்பத்தினர் 22 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், குறிப்பிட்ட வங்கிக்கிளையும் இருவாரங்களுக்கு மூடப்படுவதாகவும் பொதுசுகாதாரப்பரிசோதகர் சுப்பிரமணியம் சுதர்ஷன் தெரிவித்தார்.

பதுளை தினகரன் விசேட நிருபர் 

Thu, 04/22/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை