ஓகஸ்ட், டிசம்பர் பாடசாலை விடுமுறைகளில் மாற்றம்

ஏப்ரல் 19 ஆம் திகதியன்று பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதும் எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறை காலங்களில் மாற்றங்கள் ஏற்படும் என கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

இந்த வருடத்தின் ஓகஸ்ட் மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த க.பொ.த. உயர் தர பரீட்சை மற்றும் 5 ஆம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சை என்பன எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால், ஓகஸ்ட் மாத பாடசாலை விடுமுறையை ஒக்டோபர் மாதத்தில் வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டு வருகிறது.

மேலும், க.பொ.த. சாதாரணத் தர பரீட்சை அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் நடத்த உத்தேசித்துள்ளதால், டிசம்பர் மாதத்துக்கான விடுமுறையை ஜனவரி மாதம் வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

ஆகவே, ஓகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாதங்களில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு க.பொ.த. உயர் தரம். 5 ஆம் தர புலமை பரீட்சை, க.பொ.த. சாதாரண தர பரீட்டைசகள் நடத்தப்படும் காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சசின் உயர்மட்ட குழு கலந்தாலோசித்து வருகிறது.

5 ஆம் தர புலமை பரிசில் பரீட்சை ஒக்டோபர் 3 ஆம் திகதியன்றும், க.பொ.த உயர் தரப்பரீட்சை
ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை யிலும், க.பொ.த. சாதாரணத் தர பரீட்சை அடுத்தாண்டு ஜனவரி மாத கடைசி வாரத்திலும் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

விவசாய அமைச்சை... (03ஆம் பக்கத் தொடர்)

2016 ஏப்ரல் மாதம் 8ம் திகதி தொடக்கம் 2021 மார்ச் மாதம் 7ம் திகதி வரைக்குமான வாடகையாக மேற்குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டியுள்ளது. அமைச்சை அக்கட்டடத்தில் அமைப்பதற்காக காரியாலய வசதியை வழங்கல், மரத்தளபாடங்கள் மற்றும் உபரணங்களை விலைக்கு வாங்கல் தொடர்பாடல் வசதிகள் மற்றும் ஆலோசனை சேவைகளுக்காக செலவிடப்பட்ட தொகை 34 கோடி ரூபா மொத்த வாடகைக்கு மேலதிகமாகவும் செலுத்த வேண்டியுள்ளது. விவசாய அமைச்சை மற்றும் கட்டடத்துக்கு சொந்தமான தனியார் நிறுவனத்துக்கிடையேயான ஒப்பந்தம் இம்மாதம் 7ம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. அன்றைய தினம் குத்தகைக்குப் பெற்றவர் மீண்டும் குத்தகைக்கு வழங்கியவரிடம் கையளிக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tue, 04/13/2021 - 09:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை