Header Ads

ஈரான் அணு பேச்சில் அமெரிக்கா பங்கேற்பு

ஈரான் அணு உடன்படிக்கை தொடர்பான வியன்னா பேச்சுவார்த்தையில் அமெரிக்கா பங்கேற்கவுள்ளது. அந்த உடன்படிக்கையில் இருந்து 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் டிரம்ப் நிர்வாகம் விலகிக்கொண்டது.

இந்த உடன்படிக்கைக்கு மீண்டும் திரும்புவதற்கு ஜனாதிபதி ஜோ பைடன் விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

எனினும் ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை தளர்த்தி இந்த உடன்படிக்கையின் கடப்பாடுகளுக்கு ஈரானை திரும்பச் செய்யும் முயற்சியில் உடன்படிக்கையில் உள்ள ஏனைய நாடுகள் முயற்சித்து வருகின்றன.

தடைகள் நீக்கப்படும் வரை அமெரிக்காவை நேருக்கு நேர் சந்திப்பதில்லை என்று ஈரான் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் ஈரான் மற்றும் உடன்படிக்கையில் நீடிக்கும் சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா மற்றும் பிரிட்டன் பங்கேற்கும் இடத்தில் இருந்தும் வேறு ஓர் இடத்தில் இருந்தே அமெரிக்க அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்கின்றனர்.

'எமக்கு முன்னால் இருக்கும் சவாலின் அளவை எம்மால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது' என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் நெட் பிரைஸ் தெரிவித்தார்.

Wed, 04/07/2021 - 13:06


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.