கிண்ணியாவில் மினி சூறாவளி; வீடுகள், வீட்டுத்தோட்டங்கள் சேதம்

கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெள்ளாங்குளம் மற்றும் மஜீத் நகர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (02) இரவு​ை ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக வீடுகள் மற்றும் தோட்டப் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் கடும் வெப்ப நிலை நிலவியதை அடுத்து கடும் காற்றுடன் மழை பெய்துள்ளது.

கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட மஜீத் நகர் வெள்ளம் குள  பகுதியில் காற்றின் வேகம் காரணமாக 04வீடுகளுக்கும் மற்றும் பயிர்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப் பட்டுள்ளதை  அவதானிக்க முடிந்தது.

பிரதேசத்தில்  மரங்களும் முறிந்து விழுந்து உள்ளதை அவதானிக்க முடிந்தது.பிரதேசத்தில் மீள்குடியேறி மிகவும் கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வரும் இவர்களுக்கு இவ் இழப்பினால்   பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ள்தாக தெரிவிக்கப்படுகிறது.

திருமலை மாவட்ட விசேட நிருபர்

Mon, 04/05/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை