ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கீதா கோரிக்கை

ஜனாதிபதியிடம் முன்வைத்து பாராளுமன்றில் உரை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை  அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். ரஞ்சன் ராமநாயக்க என்பவர் எம்மை போன்ற ஒரு கலைஞர் என்ற ரீதியில் அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நான்கு வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பொது மன்னிப்பை வழங்க வேண்டுமென பல தரப்பினரும் வலியுறுத்தி வரும் சூழலிலேயே ஆளுங்கட்சி எம்.பி கீதா குமாரசிங்கவும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 04/24/2021 - 07:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை