ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் எதிர்க்கட்சி தலைவருடன் சந்திப்பு

ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் தூதுவர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது.  

இந்த சந்திப்பில் 05ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் கலந்து கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.  

நேற்று முற்பகல் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஐரோப்பிய சங்கத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சயிப், பிரான்ஸ் தூதுவர் எரிக் லெச்சர்ட், இத்தாலிய தூதுவர் ரீட்டா மெனில்லா, ஜெர்மனிய தூதுவர் ஹோல்டர் சுபேர்ட், ருமேனிய தூதுவர் விக்டர் செய்டுவா ஆகியோர் உள்ளிட்ட ராஜதந்திர அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.  

தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று பரவல் சூழ்நிலையில் உலக நாடுகள் முகம்கொடுக்கும் மோசமான நிலைமை மற்றும் இலங்கை எதிர்கொள்ள நேர்ந்துள்ள நிலைமை தொடர்பில் இங்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  

வைரஸ் தொற்று சூழ்நிலையை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் ஏற்பட்டுள்ள பின்னடைவு தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.              (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 04/28/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை