சிவஞானசோதி காலமானார்

அரச நிர்வாக சேவையின் மூத்த தமிழ் அதிகாரியான வேலாயுதன் சிவஞானசோதி நேற்று முன்தினம் தனது 62ஆவது வயதில் காலமானார். அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில் சுகவீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்விலிருந்தார். எனினும் நேற்று முன்தினம் இரவு மீண்டும் திடீர் சுகவீனம் ஏற்பட்டதையடுத்து கொழும்பு லங்கா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அன்று இரவு வைத்தியசாலையில் காலமானார்.

இவரது பூதவுடல் பொரளை ஜயரத்னமலர் சாலையில் இன்று காலை 9.00 - 6.00 மணிவரையும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு நாளை பிற்பகல் 1.00 மணியளவில் கிரிகைகள் ஆரம்பமாகி 4.00 மணியளவில் தகனம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் 1992ஆம் ஆண்டு அரச நிர்வாக சேவையில் இணைந்து பல முக்கிய பொறுப்புக்களில் பதவி வகித்திருந்தார். 2010ஆம் ஆண்டு தொடக்கம் அமைச்சுக்களின் செயலாளராக நியமனம் பெற்று பல முக்கிய அமைச்சுக்களில் பதவி வகித்தார்.

குறிப்பாக தேசிய கொள்கைகள், பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரஅமைச்சு ஆகியவற்றில் பதவி வகித்ததுடன் ஓய்வுக்கு பின்னர் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராகவும் பொதுசேவை ஆணைக்குழு அங்கத்தவராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Wed, 04/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை