சிறைகளிலுள்ள முஸ்லிம் கைதிகளின் ரமழான் நலன்களை கவனிக்குமாறு மகஜர்

ரமழான் மாதத்தில் முஸ்லிம் சிறைக் கைதிகள் தமது மதக் கடமைகளைச் சரிவரச் செய்வதற்கான உரிய வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர் உயர் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்து மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளதாக அகில இலங்கை வை. எம். எம். ஏ பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம். ரிஸ்மி தெரிவித்துள்ளார்.

சிறைக் கைதிகளும் மனிதர்களே.முந்தைய காலங்களில் இது போன்ற சிறப்பு ஏற்பாடுகள், வசதிகள் எல்லாம் விளக்கமறியல் மற்றும் ஏனைய சிறையில் உள்ள கைதிகளுக்கு வழங்கப்பட்டன.

இம்முறை அந்த வசதி வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை என சிறைக் கைதிகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே முஸ்லிம் கைதிகளுக்கு ரமழான் மாதத்தில் அவர்களது மதக் கடமைகளைச் செய்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் பணிவன்புடன்  கேட்டுக் கொள்வதாகவும் அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷேட பிரார்த்தனைகள், இரவு நேரத் தொழுகைகள்,சஹர் மற்றும் இப்தார் ஏற்பாடுகளைச் செய்யுமாறே அந்த மகஜரில் விஷேடமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாவத்தகம தினகரன் நிருபர்

Tue, 04/27/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை