பாண்டிருப்பில் பண்டிகைக்கால விற்பனை சந்தை திறந்து வைப்பு

தமிழ்  சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு சமுர்த்தி பயனுகரிகளின் உற்பத்திப்  பொருட்களை மேம்படுத்தல் திட்டத்திற்கமைய,  கல்முனை வடக்கு மேற்கு சமுர்த்தி வங்கி கிளைகளின்  ஏற்பாட்டில் சமுர்த்தி அபிமானி விற்பனை சந்தை நேற்று பாண்டிருப்பு  பிரதான வீதியில் அமைந்துள்ள திரௌபதை அம்மன் ஆலயவளாகத்தில் திறந்து  வைக்கப்பட்டது.

கல்முனை வடக்கு மேற்கு சமுர்த்தி வங்கி முகாமையாளர்  செ.தவசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் கலந்து கொண்டார்.

அத்துடன் முன்னிலை   அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ், சமுர்த்தி  தலைமைப்பீட முகாமையாளர்கள், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர்கள், திட்ட  முகாமையாளர்கள்,வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள், சமுதாய  அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள், பொதுமக்கள்  எனப் பலர் கலந்து கொண்டனர்.

இங்கு உள்ளுரில் உற்பத்தி செய்யப்பட்ட  பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு பிரதேச வாசிகளினால் விற்பனை செய்யப்பட்டன.  சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு எதிர்வரும் மூன்று தினங்கள் இவ் விற்பனை   சந்தை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாண்டிருப்பு தினகரன் நிருபர்

 

Fri, 04/09/2021 - 15:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை