உஷ்ண காலநிலை அடுத்த சில நாட்கள் நீடிக்கும்

- போதுமான அளவு தண்ணீர் குடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு

அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் வெப்பமான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பருவமழைக்கு இடைப்பட்ட காலங்களில் இதுபோன்ற வெப்பமான வானிலை சாத்தியமாகும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 முல்லைதீவு, வவுனியா, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை  மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நேற்று  அதிக வெப்பநிலை பதிவாகியதாக அறிய வருகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்  நிலவும் உஷ்ணமான காலநிலை ஏப்ரல் மாதம் இறுதி வரை நீடிக்கும் எனவும்  எதிர்வு கூறப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் குறைவடைந்தமை உள்ளிட்ட பல காரணிகளால் வெப்பமான காலநிலை  அதிகரித்துள்ளதாக திணைக்களம்சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த நாட்களில்  நாட்டின் பல பகுதிகளில் வெப்பத்தின் அளவு 1 முதல் 3 செல்சியஸ் வரை  அதிகரித்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதே வேளை நாட்டின் சில  பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்  எதிர்வுகூறியுள்ளது. உஷ்ண காலநிலை காரணமாக சிறுவர்களுக்கு நோய் தொற்றும்  வாய்ப்புள்ளதால் அதிகமாக நீர் அருந்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உட்பட உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த  தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்

Mon, 04/05/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை