வவுனியாவில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கப்பாச்சி கிராமத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ள சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கப்பாச்சிகுளத்தின் கீழ் உள்ள வயல்வெளியில் நேற்று (20) அதிகாலை இடம்பெற்ற இத் துயர சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, 

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 48வயதுடைய நளீம் என்பவர் கப்பாச்சிகுளத்தின் கீழ் வயல் யானைக் காவலுக்கு நேற்று முன்தினமிரவு (18) சென்றுள்ளார். நேற்று  (19) காலை 9.00மணியாகும் வரை தனது கணவர் வீடு திரும்பவில்லையென மனைவி வயல்வெளிக்கு சென்றுள்ளார். 

இதன் போது குறித்த நபர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி சடலமாக காணப்பட்டுள்ளார். அதன் பின்னர் அயலவர்களின் உதவியுடன் செட்டிக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிக்குளம் பொலிஸார் சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா விசேட நிருபர் 

Tue, 04/20/2021 - 17:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை