பிரிட்டனில் முடக்கநிலையை தளர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம்

பிரிட்டனில் நடப்பில் உள்ள வைரஸ் தொற்று முடக்கநிலையை உடனடியாகத் தளர்த்தும்படி கோரிக்கை விடுத்து ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய லண்டன் வீதிகளில் திரண்டனர்.

ஏற்கனவே அங்கு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இம்மாத ஆரம்பத்தில் கடைகள், முடிதிருத்தும் இடங்கள், வெளிப்புற உணவகங்கள், மதுபானக் கூடங்கள் ஆகியவை மீண்டும் திறக்கப்பட்டன.

திரையரங்குகள், உட்புற உணவகங்கள், மதுபானக் கூடங்கள் ஆகியவை அடுத்த மாத நடுப்பகுதியில் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் அரசாங்கத் திட்டங்களுக்கான காரணங்கள், வைரஸ் தொற்றுப் பரிசோதனைத் திட்டங்கள் ஆகியவை குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

வைரஸ் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தாலோ, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்தாலோ, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது ஒத்திவைக்கப்படும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் குறிப்பிட்டது. ஐரோப்பாவிலேயே மிக அதிகமாக பிரிட்டனில் இதுவரை 126,000க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்குப் பலியாகினர்.

Mon, 04/26/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை