கம்யூனிச கட்சியை பின்பற்றுவதற்கு சீன மதத்தலைவர்களுக்கு ஆணை

எதிர்வரும் மே 1ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் சீன கம்யுனிச கட்சி தலைமை மற்றும் வழிகாட்டலை பின்பற்றும்படி மதத் தலைவர்களுக்கு சீன அரசாங்கம் ஆணை பிறப்பித்துள்ளது.

பயங்கரவாதம் அல்லது பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் சீனாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தான வழிகளில் இருந்து மதத் தலைவர்களுக்கு வழிகாட்டும் நடவடிக்கையாகவே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதத்திற்குள் வெளிநாட்டு சக்திகள் ஊடுருவுவதற்கு எதிராக செயற்படுவதற்கு மதத் தலைவர்கள் இதில் கோரப்பட்டுள்ளனர். இந்த புதிய ஆணையை மீறும் மதத் தலைவர்கள் மீது நிர்வாகத் தடைகள் மற்றும் குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமுத்தப்படும்.

‘இந்த ஆணை அரசு வேறு, மதம் வேறு என்ற எமது மத நம்பிக்கைக்கு எதிராக உள்ளது’ என்று பீஜிங் தேவாலயத்தின் யூ யொங்காய் தெரிவித்துள்ளார். ‘இது மதச் சுதந்திரத்தை மேலும் குறுகலாக்குவதோடு மத நம்பிக்கையாளர்களை மேலும் கடுமையாக ஒடுக்குவதாக உள்ளது’ என்றும் அவர் தெரிவித்தார்.

Tue, 04/27/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை