சீன விண்வெளி நிலையத்திற்கு முதல் தொகுதி அனுப்பிவைப்பு

புதிய நிரந்தர விண்வெளி நிலையம் ஒன்றுக்கான முக்கிய தொகுதி ஒன்றை சீனா விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.

வென்சாங் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து லோங் மார்ச் - 5பி ரொக்கெட் மூலம் விண்வெளி வீரர்கள் தங்கி இருப்பதற்கான தியன்ஹே தொகுதி அனுப்பப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் இந்த புதிய விண்வெளி நிலையத்தை இயக்க சீனா எதிர்பார்த்துள்ளது.

தற்போது விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் என்ற ஒரே விண்வெளி நிலையமே இயங்கி வருகிறது. அதில் சீனா இடம்பெறவில்லை.

சீனா தனது விண்வெளித் துறை ஆராய்ச்சிகளை அண்மைக்காலத்திலேயே ஆரம்பித்தது. 2003 ஆம் ஆண்டிலேயே அந்த நாடு தனது முதலாவது விண்வெளி வீரரை பூமியின்் சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பியது. எனினும் சோவியட் ஒன்றிம் மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்து இதனைச் செய்த மூன்றாவது நாடாக அது பதிவானது.

சீனா இதற்கு முன்னர் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இரு விண்வெளி நிலையங்களை நிறுத்தியது. டியாங்கொங் - 1 மற்றும் டியாங்கொங் - 2 என்ற அந்த இரு விண்வெளி நிலையங்களும் ஒரு சாதாரண வடிவத்தை கொண்டதாக விண்வெளி வீரர்கள் குறுகிய காலம் தங்கி இருக்க முடியுமானதாகவே இருந்தன.

Fri, 04/30/2021 - 14:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை