இஸ்ரேலிய இராணுவத்தால் பலஸ்தீனர் சுட்டுக்கொலை

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை சோதனைச் சாவடி ஒன்றில் தம்மை மோதவந்ததாக குற்றம்சாட்டி கார் வண்டியில் வந்த பலஸ்தீனர் ஒருவரை இஸ்ரேலிய இராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். எனினும் அந்தக் காரில் இருந்த கொல்லப்பட்ட ஆடவரின் மனைவியின் கூற்று இந்தக் குற்றசாட்டுக்கு முரணாக உள்ளது.

படையினரை நோக்கி இந்த வாகனம் மோதும் வகையில் வந்ததை அடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தில் 42 வயதான ஒசாமா மன்சூர் என்பவர் கொல்லப்பட்டதோடு அவரது மனைவி காயமடைந்தார்.

இது பற்றி கொல்லப்பட்டவரின் மனைவி பலஸ்தீன தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “அவர்கள் காரை நிறுத்தும்படி கூறியபோது அதனை நிறுத்தி விட்டு நாம் அவர்களிடம் சென்றோம். பின்னர் எம்மை பார்த்த அவர்கள் செல்லும்படி கூறினார்கள். நாம் காருக்கு திரும்பி நகர்ந்தபோது அனைவரும் எம்மை நோக்கி சுட ஆரம்பித்தார்கள்” என்று குறிப்பிட்டார்.

Wed, 04/07/2021 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை