உயிரிழந்தவர்கள் நேற்று நினைவு கூரப்பட்டனர்

ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக நேற்று (21) காலை 8.45 க்கு நாடளாவிய ரீதியில் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அனைத்து மக்களிடமும் விடுத்த கோரிக்கைக்கு அமைய இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலின் இரண்டு ஆண்டுகால நினைவு தினத்தை முன்னிட்டு, நாடுமுழுவதுமுள்ள அனைத்து தேவாலங்களில் நேற்றைய தினம் விசேட ஆராதனையுடன் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அத்துடன், ஏனைய மத வழிபாட்டுத் தலங்களிலும் விசேட வழிபாடுகளுடன், அஞ்சலி நிகழ்வுகளும் நடைபெற்றன.

ஏப்ரல் 21 தாக்குதலின், இரண்டு ஆண்டுகால நினைவு தினத்தை முன்னிட்டு, நாடுமுழுவதுமுள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 

Thu, 04/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை