சர்ச்சைக்குரிய எண்ணெய் மலேசியாவுக்கு மீள் ஏற்றுமதி

ஏற்றிச்செல்ல கப்பல் இலங்கை வந்தது

புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் கலந்துள்ளதாக கூறப்படும் தேங்காய் எண்ணெயை மீள் ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் நேற்றைய தினம் அதனை ஏற்றிச் செல்வதற்காக மலேசியாவிலிருந்து பார்பரா என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக சுங்கப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய தெரிவித்தார். 'எப்லடொக்சின்' இரசாயனம் கலந்துள்ளதாக இனங்காணப்பட்டுள்ள மூன்று கோடிக்கு மேல் பெறுமதியுள்ள 105.000 கிலோ தேங்காய் எண்ணெய் மலேசியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் 'பார்பரா' கப்பல் மூலம் அது மலேசியாவுக்கு மீன் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேற்படி தேங்காய் எண்ணெய் தற்போது கொழும்பு துறைமுகத்தில் எஸ்.டி.ஜி.டி. முனையத்தில் உள்ள களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கட்டானை பிரதேசத்தில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான களஞ்சியசாலையில் இருந்து கைப்பற்றப்பட்ட மேற்படி தேங்காய் எண்ணெய் ஆறு கொள்கலன்களில் களஞ்சியப்படுத்தி உள்ளதாக தெரிவித்த அவர் அதன் பெறுமதி 30,754,500 ரூபா என்றும் அவர்மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 04/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை