கொரோனா தொற்று அச்சுறுத்தல்; கொஸ்வத்தை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடல்

சிலாபம், கொஸ்வத்தை பொலிஸ் நிலையம் நேற்று தற்காலிகமாக மூடப்பட்டது.இங்குள்ள பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானதையடுத்தே கொஸ்வத்தை பொலிஸ் நிலையம் நேற்று வெள்ளிக்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது.

இப்பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகள் கொஸ்வத்தை ஸ்ரீ விஜேவர்தனாராம விகாரைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இப்பொலிஸ் நிலையத்தின் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றுக்குள்ளான இப் பொலிஸ் பரிசோதகர் சிகிச்சைக்காக கொழும்பு பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ. சீ. ஆர் பரிசோதனையிலேயே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் மாவட்ட குறூப் நிருபர்

Sat, 04/24/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை