எகிப்தில் பண்டைய மன்னர்கள் ஊர்வலம்

எகிப்தின் பண்டைய மன்னர்களின் பதப்படுத்தப்பட்ட உடல்களை புதிய அருங்காட்சியகத்திற்கு இடமாற்றுவதை ஒட்டி தலைநகர் கெய்ரோவில் ஆடம்பர அணிவகுப்பு வைபவம் ஒன்று இடம்பெற்றது.

22 மன்னர்கள் மற்றும் ராணிகளின் மம்மிகள் தஹ்ரிர் சதுக்கத்தில் இருக்கும் எகிப்து அருங்காட்சியத்தில் இருந்து 2017 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட 5 கிலோமீற்றருக்கு அப்பால் இருக்கும் எகிப்து தேசிய அரங்காட்சியத்தை நோக்கி இந்த அணிவகுப்பு இடம்பெற்றது.

கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் பழங்காலத்தில் அரசர்கள் காலமானால், அவர்களின் உடல்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் படகு போன்று வடிவமைக்கப்பட்ட 'சிறப்பு வாகனங்களில்' மம்மிகள் எடுத்துச் செல்லப்பட்டன. கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

உலகின் தனித்துவமான இத்தகைய வரலாற்று நிகழ்வு இனி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று எகிப்து சுற்றுலாத்துறை அமைச்சர் காலித் அல் அனானி கூறினார்.

இந்த மம்மிகள் வரும் 18 ஆம் திகதி மக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 04/05/2021 - 12:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை