சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடில்லை; இலங்கையரை அழைத்துவரும் நடவடிக்கையிலும் மாற்றமில்லை

- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு 

தற்போதைய கொவிட் தொற்று நிலையிலும் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் படி விமான நிலைய நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் நடவடிக்கை என்பன தொடரும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.  

கொவிட் நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், இலங்கையர்கள் அழைத்து வரும் நடவடிக்கையை கட்டுப்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  

இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை, சுகாதார அறிவுறுத்தல்களின்படி மற்றும் கொவிட் கட்டுப்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.  

இதுவரை சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான முறையில் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தொற்று ஏற்பட்டால், அவர்கள் சமூகமயமாக்கப்படுவதைத் தடுக்க முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.  

இருந்தாலும் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.(பா) 

Tue, 04/27/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை