அஸ்ட்ராசெனகா தடுப்பூசி நெதர்லாந்தில் இடைநிறுத்தம்

கொரோனா வைரஸுக்கு எதிரான அஸ்ட்ராசெனகா தடுப்பு மருந்தை பயன்படுத்துவதை நெதர்லாந்து வரும் ஏப்ரல் 7ஆம் திகதி வரை இடைநிறுத்தி உள்ளது.

ஆரம்பத்தில் 60 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கு மாத்திரம் இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதை நிறுத்திய நிலையில் அதனை முழுமையாக இடைநிறுத்துவதற்கு நெதர்லாந்து சுகாதார அமைச்சு கடந்த சனிக்கிழமை தீர்மானித்தது.

இரத்தம் உறையும் பாதிப்பு பற்றிய அச்சத்தால் அஸ்ட்ராசெனகாவை 60 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கு பயன்படுத்துவதை ஜெர்மனி இடைநிறுத்திய சில நாட்களிலேயே நெதர்லாந்து இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட ஐந்து பேரிடம் இரத்த உறைவு பாதிப்பு ஏற்பட்டிருப்பதை பக்கவிளைவுகள் தொடர்பில் கண்காணிக்கும் நெதர்லாந்து அமைப்பு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தது.

இந்த அனைத்து சம்பவங்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டு ஏழு முதல் 10 நாட்களுக்குள் இடம்பெற்றிருப்பதோடு அனைவரும் 25 மற்றும் 65 வயதுக்கு இடைப்பட்ட பெண்களாவர்.

இது தடுப்பூசியால் ஏற்பட்டதா, என்பது பற்றி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி பயன்பாடு இடைநிறுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சர் ஹுகோ டி ஜொங் தெரிவித்துள்ளார்.

Mon, 04/05/2021 - 14:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை