நுண்கடனை நிறுத்தக்கோரி கந்தளாயில் கையெழுத்து

பெண்களை பலியெடுக்கும் நுண் கடனை நிறுத்தக்கோரி சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாயில்  கையெழுத்து சேர்க்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை  (25) நடைபெற்றன.

இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் நுண் கடன் எதிர்ப்புக்கு கையெழுத்திட்டனர்.

இச்செயற்பாடு இம்மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் மேற்கொண்டு வருவதாகவும், இறுதியில் கையெழுத்துக் கோவையை ஜனாதிபதியிடம் கையாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

கந்தளாய் தினகரன் நிருபர்

Tue, 04/27/2021 - 11:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை