எதிரணியினரால் அடிப்படையற்ற விமர்சனங்கள் பல முன்வைப்பு

புதிய அரசியலமைப்பை மீறவில்லை −ஜீ.எல்

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் அடிப்படையற்ற விமர்சனங்களை முன்வைத்து வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்காலத்தில் நடந்ததை மறந்து அவர்கள் தற்போது செயற்படுவதாக தெரிவித்த அவர், நாட்டின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர் ஜீ .எல் பீரிஸ்;

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட தரப்பினர் துறைமுக நகர திட்டம் தொடர்பில் எந்தவித அடிப்படையுமற்ற பொய் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்,

இதுவரை அது தொடர்பில் 20 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவர்களது காலத்தில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். நாட்டிற்கு வருமானம் அவசியம் என்பதை நாம் சகலரும் அறிவோம். அதற்காக கடன்களைப் பெற்றுக் கொள்வது அல்லது வரிவிதிப்பை அதிகரிப்பது இடம்பெற வேண்டும் .அவ்வாறு நடந்தால் மக்களுக்கான சுமையே அதிகரிக்கும் அதனால் தான் இவ்வாறான மாற்று முதலீட்டுத் திட்டத்தை முன்னெடுத்தோம். 2018 -2019 காலங்களில் நாட்டில் முதலீடுகள் இருக்கவில்லை எமது அரசாங்கம் மேற்கொண்டுள்ள சகல நடவடிக்கைகளும் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே உள்ளது. மேற்படி சட்ட மூலத்தை சட்ட மா அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் அமைச்சர் ஜி .எல் .பீரிஸ் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 04/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை