அமெரிக்காவில் கறுப்பின சிறுமி பொலிஸாரால் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் 15 வயது கறுப்பின சிறுமி ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.

அந்த மாநிலத் தலைநகரான கொலம்பஸில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மக்கியா பிரைன்ட் என்ற சிறுமியே கொல்லப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கத்திக்குத்து தாக்குதல் முயற்சி ஒன்று தொடர்பில் பொலிஸார் அழைக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தம்மை பெண் ஒருவர் கத்தியால் குத்த முயற்சிப்பதாகவே பொலிஸாருக்கு அழைப்புக் கிடைத்துள்ளது.

அந்த சிறுமி அனாதை இல்லம் ஒன்றில் வசித்து வந்த நிலையில் அங்கு ஒருவருடன் அந்த சிறுமிக்கு மோதல் ஏற்பட்டதாக அவரது சித்தி என்று கூறிக்கொள்ளும் ஹாசெல் பிரியான்ட் என்பவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அப்போது அந்த சிறுமியே கத்தியை வைத்திருந்ததாகவும் அந்தக்கத்தியை கைவிட்ட பின்னரே பொலிஸார் பல முறைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Thu, 04/22/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை