புதுவருடத்தையொட்டி விசேட ரயில், பஸ் சேவைகள் நடைமுறை

- இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

தமிழ் - சிங்கள புதுவருடத்தையொட்டி விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். 

புதுவருட காலங்களில் தமது சொந்த ஊர்களுக்கு பயணிப்பவர்களின் வசதி கருதியே மேற்படி பஸ், ரயில் சேவைகள் அதிகரிக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர் அதற்கிணங்கபயணிகள் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் ரயில்வே ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இரத்துச் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பண்டிகை காலங்களில் போதிய பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகளை மேற்கொள்வது தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் நேற்றைய தினம் ரயில்வே திணைக்களம் தெரிவிக்கையில் புதுவருடத்தை ஒட்டி மேலதிகமாக பல ரயில் சேவைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அதற்கிணங்க கடல் வழி ரயில் பாதை உட்பட பிரதான ரயில் மார்க்கங்களில் ரயில் சேவைகள் அதிகரிக்கப்படும் என்றும் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இந்த விசேட ரயில் சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ரயில்வே திணைக்கள உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.(ஸ) 

லோரன்ஸ் செல்வநாயகம் 

 

 

 

 

Wed, 04/07/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை