சீன தடுப்பு மருந்து திறன் பற்றி சந்தேகம் வலுக்கிறது

உலக மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் செயல்திறன் கொண்ட தடுப்பு மருந்தை வழங்குவதாக சீன ஜனாதிபதி சி ஜின் பிங் வாக்குறுதி அளித்தபோதும் அந்நாட்டு தடுப்பு மருந்து விநியோகம் குறைந்தது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேனும் எதிர்பார்த்த அளவில் வெற்றி அளிக்கவில்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பு மருந்தின் விநியோகம், செயல்திறன் மற்றும் விலை தொடர்பில் இருக்கும் பல கேள்விகளால் பிராந்தியத்தில் சீனாவின் தடுப்பு மருந்து பற்றி சந்தேகம் வலுத்திருப்பதாக அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்காக ரிச்சர்ட் ஜாவத் ஹெய்டரியன் எழுதியுள்ளார். இந்த நிலை சீனா தடுப்பூசி இராஜதந்திரத்தில் பேரும் சவாலை உருவாக்கியுள்ளது.

புதிய 'சுகாதார பட்டுப்பாதை' ஒன்றுக்காக வெளிநாடுகளுக்கு வழங்க சீனா கடந்த ஆண்டு 18 தடுப்பு மருந்துகளின் சோதனையை ஆரம்பித்தது.

எனினும் சீன மருந்து உற்பத்தியாளர்கள் உற்பத்தியில் தீவிர மந்த நிலையை சந்தித்திருப்பதோடு சினொவக் தடுப்பு மருந்து உற்பத்தி அளவு கடந்த ஜனவரியில் எதிர்பார்த்த அளவில் பாதியையே எட்டிய நிலையில் அதன் உற்பத்தித் திறன் பற்றி கேள்வி அதிகரித்துள்ளது.

சீன மருத்துவ சோதனைக்கான பிரதான மையமாக உள்ள இந்தோனேசியாவுக்கான மருந்து விநியோகத்திலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று மியன்மாருக்கு இந்தியாவில் இருந்து 1.5 மில்லியன் தடுப்பூசி கிடைக்கப்பெற்ற நிலையில் சீனாவில் இருந்து 3,00.000 டோஸ்களே கிடைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Sat, 04/10/2021 - 09:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை