அரசியல் பழிவாங்கல்: பரிந்துரைகளை அமுலாக்கும் யோசனை பாராளுமன்றத்தில்

அரசியல் பழிவாங்கல்: பரிந்துரைகளை அமுலாக்கும் யோசனை பாராளுமன்றத்தில்-Political Victimization PCoI Report to Parliament

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த பாராளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

2015 ஜனவரி 8 ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான யோசனையே பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 21 ஆம் திகதி மேற்படி யோசனையை சபையில் முன்வைப்பார் எனத் தெரியவருகின்றது. அத்துடன் இந்த விவகாரம் தொடர்பில் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்படலாம் எனவும் அறியமுடிகின்றது.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையானது அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும், எதிரணி உறுப்பினர்கள் 10 பேரின் குடியுரிமையைப் பறிப்பதற்கான யோசனைகூட அதில் உள்ளது எனவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

Fri, 04/16/2021 - 12:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை